அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

0
201

இவரின் கால்ஷீட் கிடைக்காமல் பல பிரபலங்கள் இவரை பின் தொடர்ந்து வரும் அளவுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் அஜித் குமார். மேலும் ரேசில் ஆர்வம் செலுத்துவதால் இவரை அணுகுவது என்பது கஷ்டமான ஒன்றாகும் .

இவ்வாறு இருப்பின் இவரின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் இவருக்கு ஏற்பட்ட இழப்பு, அவமானம், தோல்விகள் அதிகம் என்றே கூறலாம். ஆனால் தற்பொழுது இவரின் நிலைமை மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். அவ்வாறு அஜித் நிராகரித்த 5 பிரபலங்களை பற்றி இங்கு காணலாம்.

கலைப்புலி எஸ் தாணு: இவர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகிஸ்தர் ஆவார். இவரின் இரு கம்பெனிகளான வி க்ரியேஷன் மற்றும் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் விநியோகித்த படங்கள் ஏராளம். இவர் பல பிரபல நடிகர்களை வைத்து தயாரித்த படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது. இருப்பினும் அஜித்திற்கு ஆக்சிடென்ட் ஏற்பட்ட பொழுது இனி இவர் ஹீரோ ரோலுக்கு தகுதியாக மாட்டார் என்று அவரை நிராகரித்துள்ளார். இதை அறிந்த அஜித் அதன் பின் கடும் முயற்சியால் ஒப்பந்தமான படங்களை முடித்துக் கொடுத்தாராம். இவ்வாறு அஜித்தின் மேல் நம்பிக்கையை இல்லாதவாறு அவர் நடந்து கொண்டாராம். ஆகையால் தற்பொழுது இவர் படங்களை புறக்கணிக்கிறார் அஜித்.

அகத்தியன்: 1996ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் காதல் கோட்டை. இதில் அஜித், தேவயானி, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்று தந்தது. ஆனாலும் அதன்பின் இவர் எந்த ஒரு படமும் அஜித்தை வைத்து இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த்: 1995ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆசை. இப்படத்தில் அஜித் குமார், சுவலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. இதை தொடர்ந்து அஜித்திற்கு மேலும் பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து நல்ல வசூலை பெற்று தந்தது. இருப்பினும் இதைத்தொடர்ந்து இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் அஜித்துடன் கிடைக்கவில்லை.

ஏ ஆர் முருகதாஸ்: 2001ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீனா. இப்படத்தில் அஜித்குமார், லைலா இணைந்து நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் கேங்ஸ்டர் ஆக வரும் அஜித்திற்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் மிரட்டல் என்னும் படத்தில் அஜித்துடன் ஒப்பந்தம் இடப்பட்டது. ஆனால் அஜித்தை விட்டு விட்டு இவர் சூர்யாவை வைத்து அதை கஜினி என்ற பெயரில் இயக்கினார்.

எஸ் எஸ் சக்கரவர்த்தி: இவர்கள் இருவரின் காம்பினேஷனில் பல படங்கள் வெளிவந்து வெற்றி கண்டது. இவர் தொடர்ந்து அஜித்தை வைத்து தயாரித்த படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது. மேலும் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த கடைசி படம் தான் வரலாறு. இதுவும் மக்களின் வரவேற்பை பெற்ற படமாகும். மேற்கொண்டு அஜித் பல படங்களில் தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் போட்டது பிடிக்காமல் இவரின் படத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

ஆகையால் இது போன்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற தவறியதாலும் மேலும் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாலும் தற்போது இவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார் அஜித். இதற்கு பின் இவர்களோடு அஜித் நடித்து படங்கள் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.