ஸ்வேதா மேனனின் பாட்டில் சேலஞ்சு

மலையாள நடிகை ஸ்வேதா தனது பாட்டில் கேப் சேலஞ்சு நிறைவேற்றி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். பாட்டில் கேப் சேலஞ்சு என்பது தற்போது ஹாலிவுட், பாலிவுட் என எல்லா பிரபலங்களிடமும் வைரலாகி வருகிறது. ஒரு பாட்டிலை வைத்துவிட்டு, அதன் மூடியை தனது காலால் உதைத்து கழட்ட வேண்டும். இதை, ஹாலிவுட் நடிகர்கள் தொடங்கி தற்போது பாலிவுட் கோலிவுட் என்று மட்டும் இல்லாமல் மேலும் பலரும் செய்து காட்டி அதை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தனது சேலஞ்சை நிறைவேற்றியுள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில், நடிகர் நடிகைகள் வெறும் படத்தில் மட்டும் நடித்தால் போதாது. ஏதாவது செய்துகொண்டே இருந்தால்தான் மக்கள் மத்தியில் தனது பெயரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

Swetha Menon Does Bottle Cap Challenge

அவரவருக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறதோ, அதற்கேற்றவாறு ஏதாவது செய்து சமூக வலைத்தளங்களில் தங்களை ட்ரெண்டிங்கில் வைத்துக்கொள்ளவே பார்க்கின்றனர். சமீபத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் காணும் இந்த பாட்டில் சேலஞ்சை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.

மலையாள நடிகை ஸ்வேதாவின் இந்த பாட்டில் சாலஞ் தற்பொது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கைதட்டலை பெற்றுத்தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top