சிம்புவின் மாநாடு படம் எடுத்தே தீருவேன் – சுரேஷ் காமாட்சி

நடிகர் சிம்பு நடிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் மாநாடு, விரைவில் படபிடிப்பு துவங்கும் என்றும், மாநாடு படத்தின் பெரும்பாலான படபிடிப்பு மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டிருப்பதால், படக் குழுவினர் விரைவில் மலேசியாவுக்கு செல்லவிருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் வரை சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், சில நாட்களாக, படம் கைவிடப்பட்டதாக தகவல் பரப்பபட்டது. நடிகர் சிம்பு, படத் தயாரிப்புக் குழுவுக்கு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புக்கு, சில நிபந்தனைகள் விதித்ததாகவும் செய்திகள் பரவின. இந்த நிபந்தனைகளைத் தொடர்ந்து படத் தயாரிப்புக் குழு, படம் எடுக்கும் முடிவையே கைவிட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்படியொரு நிலை இல்லை என, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெளிவுபட கூறியிருக்கிறார்.

Simbu's Maanadu Film

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மாநாடு படம், என்னுடைய கனவு ப்ராஜெக்ட்களில் ஒன்று. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தப் படத்தை எடுத்தே தீருவேன். படத் தயாரிப்புக்கான முன் வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், படத்தைப் பற்றி திட்டமிட்டே சிலர், தினந்தோறும் ஒரு தகவலை பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். நடக்கட்டும் நடக்கட்டும், படத்துக்கு இதுவும் ஒரு இலவச விளம்பரம்தான். இவ்வாறு சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top