இயக்குனர் சங்க தேர்தல்: ஆர். கே. செல்வமணி வெற்றிபெற்றார்

பாரதிராஜா, இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் இன்று (ஜூலை 21) நடந்தது. இதில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வணி வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை வடபழநியில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டனர். இதில் இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், விக்ரமன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் பதிவான 1503 ஓட்டுக்களில் 1366 ஓட்டுக்கள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வித்தியாசாகர் 100 ஓட்டுக்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.R.K.செல்வமணி. அவர்கள் பெற்ற ஒட்டுக்கள் 1386
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரு.வித்யாசாகர். அவர்கள் பெற்ற ஒட்டுக்கள் 100

திரு.R.K.செல்வமணி தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர்: திரு. R.V.உதயகுமார் அவர்கள்
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியில்லாததால் திரு. R.V.உதயகுமார் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பொருளாளர்: திரு. M.பேரரசு அவர்கள்
பொருளாளர் பதவிக்குப் போட்டியில்லாததால் திரு.M.பேரரசு பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

  1. திரு. K.S.ரவிக்குமார் – 1289
  2. திரு.S ரவிமரியா – 1077
  3. திரு.வேல்முருகன் – 442

துணைத் தலைவர் பதவிக்கு திரு.K.S ரவிக்குமார் மற்றும் திரு. ரவிமரியா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இணைச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

  1. திரு. சுந்தர் C – 1271
  2. திரு. ஏகம்பவாணன் – 1182
  3. திரு. லிங்குசாமி – 1157
  4. திரு.சித்ரா லட்சுமணன் – 990
  5. திரு.ராஜா கார்த்திக் – 740
  6. திரு. நாகராஜ் மணிகண்டன் – 196

இணைச் செயலாளர்கள் பதவிக்கு திரு. சுந்தர் C, திரு. ஏகம்பவாணன், திரு. லிங்குசாமி, திரு.சித்ரா லட்சுமணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12 செயற் குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top