புதுச்சேரியில் வசிக்கும் அமலா பாலின் காதலர்

ஆடை படத்தின் புரமோசன் தொடர்பான நேர்காணல்களில் பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினார நடிகை அமலா பால்.

இந்த நிலையில் தன் காதலரைப்பற்றி மனம் திறந்திருக்கிறார். மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. அமலா பால் மிக தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, ரம்யா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீஸரில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. 

இப்படத்திற்காக அளித்த பேட்டியில் “நான் என் பார்ட்னரை கேட்ட பிறகு தான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன்.”ஆடை” பட கதையை கேட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். அவர் இது ஒரு அருமையான வாய்ப்பு. முதலில் உன்னை தயார் செய்துகொள், உடலாலும் மனதாலும் முழுமையாய் தயாராகி இதைச் செய் என்று சொன்னார். அவரால் தான் இப்படத்தை ஒத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Amala Paul's Lover

அமலா பாலிடம் அவரது காதலரைப்பற்றி கேட்டபோது “அவர் தான் என்னை காயங்களிலிருந்து மீட்டெடுத்தார். வாழ்வின் மீதான நம்பிக்கை பொய்தபோது நம்பிக்கை அளித்தார். முழுக்க நமக்காக ஒரு தாய் மட்டும் தான் சிந்திக்க முடியும், தியாகம் செய்ய முடியும் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உடைத்தவர் அவர். எனக்காக அவரது வேலை, திட்டங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்து எனக்காக எப்போதும் துணை நிற்கிறார். அவர் தான் என் வாழ்வின் ஒளி, நம்பிக்கை” என புகழ்ந்து தள்ளியுள்ளார். 

தன் காதலர் பாண்டிச்சேரியில் வசித்து வருவதாக கூறிய அமலா பால், அவர் யார் என்ற தகவலை கடைசிவரை தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top