இப்படித்தான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள்…! – போட்டு உடைத்த சீரியல் நடிகை மீனா வேமுரி..!

0
264

பிரபல சீரியல் நடிகை மீனா வேமுரி தன்னுடைய திரைத்துறை அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் இவர் பேசியிருந்த பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. நந்தினி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகை மீனா வேமுரி தற்போது இலக்கியா என்ற சீரியலிலும் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் யூ-ட்யூப் தளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த இவர் அந்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் இணைய பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க கூடிய இவர் சீரியலில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார்.

குறிப்பாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசிய இவர் பட வாய்ப்புக்காக நேரடியாக யாரும் படுக்கைக்கு அழைக்க மாட்டார்கள்.

தங்கள் திரைப்படம்.. தான் நடிக்க இருக்கக்கூடிய கதாபாத்திரம்.. சம்பளம்.. இந்த படத்தில் நடிப்பதால் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்.. அந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் யார் யார் நடிக்கிறார்கள் போன்ற விஷயங்களை எல்லாம் கூறிவிடுவார்கள்.

நாம் அந்த படத்தின் மீதான கனவில் இருபோம்.. அப்போது தான்.. ஆனா…ல்.. என்று இழுப்பார்கள்.

பெரும்பாலான நேரங்களில் தொலைபேசி வழியாக தான் இப்படியான அட்ஜெஸ்மெண்டுக்கான அழைப்புகள் இருக்கும்.

அவர்கள் ஆனா….ல்.. என்று இருக்கும் போதே அந்த போனை நான் கட் செய்து விடுவேன். இது மாதிரியான அட்ஜெஸ்மெண்டை செய்து கொண்டால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த பட வாய்ப்பு வேண்டாம் என கூறி விடுவேன்.

இதனால் பல பட வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் ஆகி வருகின்றது.