தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் நடிகை சதா ( Sada ). ஜெயம் ரவியுடன், ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில், அந்நியன் படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மிக பிரபலமானார்.
துவக்கத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா, ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக மாறினார். மோசமான காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தார். இப்போது, தமிழில் பட வாய்ப்புகளின்றி சதா இருக்கிறார்.
எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சதா, அவ்வப்போது தனது, கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள ஒரு முக்கியமான இடத்தில், கடந்த பல ஆண்டுகளாக எர்த்லிங்க்ஸ் கபே என்ற ஓட்டலை, சதா நடத்தி வருகிறார். ஓட்டல் துவங்கிய ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாக வளர்ந்து, இப்போது அந்த பகுதியில் முக்கிய ஒரு ஓட்டலாக அது மாறியுள்ளது.
இதில் வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும், ஓட்டலை சிறப்பாக நிர்வகிப்பதில் சதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பெருமை, திருப்தி கிடைத்து வருகிறது.
இந்நிலையில், எர்த்லிங்க்ஸ் கஃபே ஓட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர், இன்னும் ஒரு மாதத்தில் ஓட்டலை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதாவது, ஒரு மாதத்துக்குள் ஓட்டலை காலி செய்ய வேண்டும்.
இல்லையென்றால், ஓட்டலை மூடிவிடுவேன் எனவும் எச்சரித்துள்ளார். ஒரு மாதம் மட்டுமே, கால அவகாசம் அளித்து, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அந்த வீடியோவில் பேசியுள்ள சதா, பல ஆண்டுகளுக்கு முன், மும்பையில் முக்கிய இடத்தில் இந்த ஓட்டலை ஆரம்பித்தோம். ஒரு குழந்தையை பாதுகாத்து, பராமரிப்பது போன்று ஓட்டலை கவனித்துக்கொண்டோம்.
அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு, சிறந்த முறையில் நிர்வாகம் செய்ததால், இன்று எங்கள் ஓட்டல் நல்ல பெயருடன், அந்த பகுதியில் விளங்குகிறது. இந்த நிலையில் ஓட்டலை மூடவோ, அல்லது காலி செய்யவோ கூறி ஒரு மாதம் மட்டுமே, அந்த இடத்தின் உரிமையாளர் நோட்டீஸ் கொடுத்துள்ளது, மிகுந்த வேதனை அளிக்கிறது, என தழுதழுத்தப்படி கூறி கண்ணீர் விட்டு அழுகிறார்.
வீடியோவில் அவர் பேசுகையில், இந்த வீடியோ பேச வேண்டும் என்று திட்டமிடவில்லை என்றாலும், பேச வேண்டிய ஒரு கட்டாய சூழலில் பேசுகிறேன். இப்படி ஒரு நெருக்கடி நிலையை நான் எதிர்பார்க்கவில்லை.
எர்த்லிங்க்ஸ் கஃபே ஓட்டலை ஒரு குழந்தையாக தான் நான் பார்க்கிறேன். என்னுடைய முதல் தொழில் இது. இது ஒரு ரன்னிங் பிஸினஸ். இதில், இப்படி தடைகள் ஏற்பட்டால், அடுத்தடுத்து பழைய இடத்துக்கு வருவது மிகவும் சிரமம்.
இந்த இடத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் வந்த நிலையில், புதிய இடத்தில் இதே வரவேற்பை பெறுவது மிகவும் சிரமம் என்று அழுதபடியே பல விஷயங்களை பேசுகிறார்.
இந்த வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதே இடத்தில் ஓட்டலை தொடர்ந்து நடத்த, அந்த இடத்தின் உரிமையாளரிடம் பேசி சம்மதிக்க வையுங்கள், அல்லது கூடுதல் வாடகை தருவதாக பேசுங்கள்.
அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் தரப்பில் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை செய்ய முயற்சி எடுங்கள், இப்படி ரசிகர்கள் மத்தியில் வீடியோ வெளியிட்டு அழுவதால், நிலைமை மாறிவிடாது என, ரசிகர்கள் ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.