துரோகங்களை மட்டுமே சந்தித்து வந்த நடிகர் அஜித்….! உண்மையை புட்டு புட்டு வைக்கும் நடிகர் மாரிமுத்து….!!!

0
184

அஜித் சினிமாவில் வருவதற்கு முன் யாருடைய துணையும் இல்லாமல் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் வெளிவந்த படங்கள் அவருக்கு ஓரளவிற்கு வெற்றியை  வாங்கி கொடுத்தாலும், அதைத்தொடர்ந்து பல படங்கள் அவருக்கு தோல்வியை மட்டுமே கொடுத்தது.

ஆனாலும் அவர் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் படங்களில் நடித்துவந்தார் . இவர் நடித்த வாலி, ஆசை படத்தின் மூலம் இவருடைய நண்பராக நடிகர் மாரிமுத்து பழகினார். சின்னத்திரை சீரியல் ஆன எதிர்நீச்சல் நடித்து வரும் குணசேகரன் தான் நடிகர் மாரிமுத்து. இவர் அஜித்திற்கு நெருங்கிய நண்பராவார்.

பைக்கில் இருவரும் ஒன்றாக சுற்றுவதும், ஷூட்டிங்கில் இருவரும் இணைந்திருப்பதும், மணிக்கணக்காக ஓருவருக்கு ஒருவர் பேசிக் பேசிக்கொள்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதுமாக இவர்களுடைய பழக்கம் இருந்தது . மாரிமுத்து மகனுக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்தும் பணம் வசதி இல்லாத காரணத்தினால் சேர்க்க முடியாமல் தவித்து இருக்கிறார். இதை பார்த்த நடிகர் அஜித் மாரிமுத்திடம்  ஸ்கூல் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் கேட்டு நேரில் சென்று பணத்தைக் கட்டிருக்கிறார். ஆனால் அதன் பிறகு மாரிமுத்து அஜித்திடம் எந்த உதவியும் கேட்கவில்லை. இருந்தாலும் மாரிமுத்து மகனின் படிப்பு செலவை எட்டாம் வகுப்பு வரை அஜித் தான் கட்டிருக்கிறார்.

அதன்பிறகு சிறுத்தை சிவா உடன் நடிக்க ஆரம்பித்த அஜித் , மாரிமுத்திடம் பழக்க வழக்கங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அதன் காரணம் அவர் சினிமாவில் சந்தித்த துரோகங்களும், அவமானங்களும் அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது. அதனால்தான் நடிகர் அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது கிடையாது. அவருடைய மனைவி ,குழந்தைகள், குடும்பம் இது மட்டும்தான் அவருடைய சந்தோஷம் அவர்கள் தான் உண்மையானவர்கள் என்று அந்த கட்டத்திற்குள்ளேயே சென்று விட்டார்.

அவர் வீட்டில் வேலை பார்க்கும் 25 பேருக்கும்  சொந்த வீடும் அவர்களின் குழந்தைகளுடைய  படிப்பு செலவையும் அஜித் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அஜித் இந்த மாதிரியான நல்ல விஷயங்களை அமைதியாக செய்வது மற்றவர்களுக்கு தெரியுமோ இல்லையோ அவர் மனதிருப்திக்காக இன்றுவரை செய்து கொண்டு தான் இருக்கிறார். இவர் செய்யும் தர்மம் இவரை தலைகாக்கும். நடிகர் அஜித் இன்று வரை ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை  பிடித்திருக்கிறார்.