நடிகை திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சக நடிகைகள் நயன்தாரா மற்றும் ஹன்சிகா போன்றவர்கள் நடிகைகளாக நாங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று பேசியிருக்கிறார்களே…? அது பற்றி உங்களுடைய கருத்து என்ன கேள்வி எழுதப்பட்டது.
அதற்கு பதில் திரிஷா.. நடிகைகளாக இருக்கிறீர்கள்.. நிறைய சம்பாதிக்கின்றோம்.. உங்களுக்கு என்ன பிரச்சனை என்ற..? கேள்வியே மிகப்பெரிய பிரச்சனை.
பாருங்கள் நடிகையாக சினிமாவில் நடிக்கும் பொழுது சினிமா சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளும் போது பொதுவெளிகளில் வரும் போது எங்களுக்குள்ள பிரபலம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
அதை தாண்டி நடிகை என்பதை தாண்டி படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு சென்றதும் உங்கள் வீட்டில் என்னவெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அதே பிரச்சினை எங்கள் வீட்டிலும் இருக்கிறது.
எனக்கு 40 வயது ஆகிறது. இப்போதும் பல பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கிறேன். உங்களை போன்ற அதே உணர்வு எனக்கும் இருக்கிறது.
கஷ்டங்களை எப்படி தாண்டி வர வேண்டும்.. ஒரு பிரச்சனை முடிந்தால்.., இன்னொரு பிரச்சனை வந்து நிற்கும்.. எல்லோருடைய வாழ்க்கையிலுமே அவருடைய தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.. எனக்கும் இருக்கிறது.
அதனால் கஷ்டப்பட்டு அழக்கூடிய உணர்வும் எனக்கு இருக்கிறது. இது என்ன வித்தியாசம் என்றால் நாங்கள் நடிகைகளாக வெளியேறு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்ள வேண்டும்.
கவர்ச்சியாக இருப்பது போல காட்டி கொள்ள வேண்டும்.. சோகமாக முகத்துடன் கவர்ச்சி காட்ட முடியுமா..? கவர்ச்சியாக நடித்தால் எப்படி இருக்கும்.. கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தினால் எப்படி இருக்கும்.. எப்போதும் சிரித்தவுடன் முகத்துடன் இருக்க வேண்டியது எங்களுடைய கட்டாயம்.
அது எங்களுடைய தொழில். ஆனால், தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் சக மனிதர்களைப் போல அனைத்து உணர்வுகளும் இருக்கிறது. அனைத்து பிரச்சினைகளும் இருக்கிறது.
நீங்கள் உங்களுடைய பிரச்சனையை வெளியே யாருக்கும் காட்டிக்கொள்ள மாட்டீர்கள். நடிகைகளும் தங்களுடைய பிரச்சனைகளை வெளியே காட்டிக் கொள்ள மாட்டோம். நடிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது.