பட வாய்ப்பு வேணுமா..? – படுக்கைக்கு வா..? – சிவகார்த்திகேயன் பட நடிகையை டார்ச்சர் செய்த பெரிய புள்ளி..!

0
281

கடல் அலை வீசுவதை நிறுத்தினாலும் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே கூறுவது மட்டும் நிற்காது போல தெரிகிறது.

ஏனென்றால் அந்த அளவுக்கு கொடுமைகளை நடிகைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாளுக்கு நாள் தங்களுக்கு நேர்ந்த சீண்டல்கள் குறித்தும் வரம்பு மீறல்கள் குறித்தும் பல நடிகைகள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அனு இம்மானுவேல் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபலம் குறித்து பேசி இருக்கிறார்.அவர் பேசியதாவது, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல நடிகைகள் பேசுகிறார்கள். அது உண்மைதான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது.

எனக்கு நடக்கவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதனை எப்படி நான் சமாளித்தேன் என்பதுதான் இங்கே விஷயம்.

பட வாய்ப்புக்காக பெரிய இயக்குனரின் ஆடிஷனல் கலந்து கொள்ள சென்ற பொழுது என்னை தேர்வு செய்து விட்டனர். அதன் பிறகு பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள்.

அதிலிருந்து என்னுடைய குடும்பத்தினரின் ஒட்டுமொத்த உதவியுடன் வெளியே வந்தேன். நடிகைகள் இப்படியான பிரச்சினைகள் சிக்கும் போது தனியாக எதிர்கொள்வதை காட்டிலும் அவர்களுடைய குடும்பத்தினருடன் இப்படியான விஷயங்களை எதிர்கொண்டால் அவர்களுக்கு பக்க பலமாக குடும்பத்தினர் இருப்பார்கள் என பேசி இருக்கிறார் நடிகை அனு இம்மானுவேல்.