டாப் ஸ்டார், சாக்லேட் பாய் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் பிரசாந்த். ஒரு காலத்தில் நடிகர்கள் அஜித் விஜய் ஓரம் கட்டி விட்டு பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக பெண் ரசிகைகளை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார் டாப் ஸ்டார் பிரசாந்த். உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ்சினிமா நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் ஒரு நிமிடம் யோசிப்பார்.
ஆனால், அவரே ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு ஆணழகனாக இருந்தார் நடிகர் பிரசாந்த். அந்த அளவுக்கு மாஸ் நடிகராக இருந்த இவர் இவர் குடும்பத்தில் இன்னொரு நடிகரும் இருந்து வந்திருக்கிறார்.
பிரசாந்த் அறிமுகமான காலத்திலேயே அந்த நடிகரும் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால், பிரசாந்த் இடம் இருந்து எந்த ஒரு பெரிய உதவியும் கிடைக்காமல் தவித்து வந்திருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக, ZERO HATERS என்ற நிலையில் உலா வந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.
அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது ZERO HATERS என்று சொன்னபோதே. நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், நம்ம சீயான் விக்ரம் தான் அது.
பிரசாந்தின் அப்பா தியாகராஜன் வழியில் பிரஷாந்திற்கு நெருக்கமான உறவினர்தான் நடிகர் விக்ரம். சினிமாவில்நுழைந்த நடிகர் விக்ரம் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.பட வாய்ப்பு மற்றும் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு என சில விஷயங்களுக்காக பிரசாந்தை நாடி சென்று இருக்கிறார் நடிகர் விக்ரம். ஆனால், எந்த விதத்திலும் சியான் விக்ரமுக்கு கை கொடுக்காமல் உதாசீனப்படுத்தி இருக்கிறது பிரசாந்தின் குடும்பம்.
ஆனால், நடிகர் விக்ரம் தன்னுடைய தனி திறமையால் அடி மேல் அடிவைத்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார். படங்களுக்காக தன்னுடைய உடலை எந்த அளவுக்கு வருத்திக் கொள்கிறார் நடிகர் விக்ரம் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இவருடைய திரைப்படங்களில் திரைக்கதை மோசமாக இருக்கிறது. கதை தேர்வில் நடிகர் விக்ரம் கோட்டை விடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட ஒரு கதையில் தன்னை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக் கொள்கிறார் அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு நடிகர் விக்ரம் உழைக்கிறார் என்று சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
தன்னுடைய படங்கள் வெற்றியடைகிறது. தோல்வியடைகிறது. என்றாலும் கூட இதுவரை ZERO HATERS என்ற நிலையில் நீடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம்.படத்தின் வெற்றிக்காக தன்னை வருத்திக் கொள்ளும் அளவுக்கு நடிகர் விக்ரம் இந்த அளவுக்கு செல்வதற்கு காரணமே இவர்களுடைய உறவினர்கள் தான். கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு கைகொடுத்து தூக்கி விட்ட இந்த சினிமாவிற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.