நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்திருந்த மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய முதல் படமான மின்னலே படத்தில் ஹீரோயின் ரீமா சென்னுக்கு பூங்கொத்து கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து இவரது படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவருடைய படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் , ஆங்கிலத்தில் மட்டும் தான் பேசுவார் என பல விஷயங்கள் இவரை பற்றி கூறப்பட்டாலும் இவருடைய படங்களில் தலைப்பு தூயதமிழில் மட்டுமே இருக்கும்.
அந்த அளவுக்கு தமிழ் மொழியின் மீது அதீத பற்று கொண்டிருகிறாரா..? கௌதம் வாசுதேவ் மேனன். அல்லது, எதேர்ச்சையாக அமைந்த விஷயமா என்று அவர் தான் கூற வேண்டும்.
இயக்குனராக இருந்த இவர் தற்போது நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தான் நடிக்க வந்து விட்டார் என பலரும் கூறி வந்தார்கள்.
அண்மையில் இவர் நடித்த திரைப்படங்களான ஒ மை கடவுளே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இது குறித்து கூறுகையில், நான் நடிக்க வந்ததற்கு காரணமே, இயக்குனர் விஜய் மில்டன் தான்.
அவர் கொடுத்த நம்பிக்கை தான் என்னை நடிகனாக்கியது. என்னை பலரும் இப்போது நடிக்க அழைக்கிறார்கள். என்று கூறியுள்ளார்.