நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதல் தோல்வி குறித்து மனம் திறந்து இருக்கிறார்.தமிழில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து சினிமாவிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய காதல் தோல்வி குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
அவர் பேசியதாவது ஒரு காலத்தில் தவறான ஒருவரை நம்பி இருந்தேன் அவருடைய வார்த்தைகளையும் பேச்சுகளையும் நம்பி இருக்கிறேன். அவருடைய பேச்சைக் கேட்டு தவறான பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
சில நேரத்தில் சிலரை நாம் மிகவும் நம்பி விடுவோம் அதேபோலத்தான் நானும் நம்பினேன் என்னிடம் உள்ள பலவீனம் ஒருவரின் பலம் என்று நம்பும் ஒரு ஆள் நான் சில நாட்களில் இப்படியான விஷயங்களை சிந்தித்துப் பார்க்கும் பொழுது நாம் உஷாராக இருந்திருக்கலாமோ என்று கூட தோன்றியிருக்கிறது.
தவறான ஒருவரை நம்பி ஏமாந்து விட்டோமே என்று புலம்பி இருக்கிறேன். அதன் பிறகு தான் ராஜவேலுவை காதலிக்க ஆரம்பித்தேன். தற்போது வரை அவர் என்னை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலித்து வருகிறார் என பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.