பிரபல நடிகை சோனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய இளமை காலம் குறித்து நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் பேசிய அவர் என்னுடைய உடல்வாகிற்கு சினிமாவில் நடிக்க வந்த பொழுது பலரும் என்னை கேலி செய்தார்கள்.
கவர்ச்சியான ஆடைகளை அணிந்த போது இந்த உடம்பை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் முடி உடுத்தலாமா என்று கேள்வி எழுப்பினார்கள்.ஆனால் எனக்குள் என் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. இளம் வயதில் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது.,
அதுதான் மது பழக்கம். கேமரா முன்பு நடிக்கும் பொழுது அதுவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்கும் பொழுது ஒரு தயக்கமான மனநிலை இருக்கும். அதனை ஓரம் கட்ட வேண்டும் என்றால் குடித்தால் தான் முடியும்.
குடித்தால் எளிமையாக இருக்கும் என்று சில நண்பர்கள் கொடுத்த யோசனையின் பேரில் மதுப்பழக்கத்திற்கு ஆளானேன். ஒரு கட்டத்தில் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
என்னுடைய பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு எனக்கு ஒரு தெளிவு பிறந்தது. மது குடிப்பது அல்லது கவர்ச்சியாக நடிப்பது எனக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை.
எனவே இனிமேல் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவெடுத்தேன். தற்பொழுது மது பழக்கத்திலிருந்து மீண்டு விட்டேன். ஒரு கட்டத்தில் மது குடிக்காமல் தூங்கவே முடியாத நிலை இருந்தது.
ஆனால் தற்பொழுது அதிலிருந்து முழுமையாக மீண்டும் இருக்கிறேன். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் வசதியாக ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
ஆனால் தற்பொழுது வசதி ஆடம்பரம் எல்லாம் ஒரு மாயை. மூன்று வேளை சாப்பாடு, நல்ல உடை.. ஒரு வீடு என இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சந்தோசமாக வாழலாம் என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.
தற்பொழுது அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். சீரியல் வாய்ப்புகள் கிடைக்கின்றன. திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன.
அவற்றை செய்து கொண்டு குறைவான சம்பளம் கிடைத்தாலும் தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைய சம்பளம் வரும்போது கூட என்னால் அந்த அளவுக்கு மகிழ்ச்சியை அனுபவிக்கவில்லை.
ஆனால் தற்பொழுது நான் மன நிறைவாக ஒரு முழுமையான பெண்ணாக உணர்கிறேன் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.