நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை மிர்ணா.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.
ஆனால் அந்த திரைப்படத்தில் இவருடைய பெயர் அதிதி மேனன் என்று அறிமுகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் அதிதி மேனன் என்ற பெயரிலேயே நடித்திருந்தார்.
இவர் நடிக்கக்கூடிய படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும் இவருடைய கதாபாத்திரங்கள் பேசப்பட்டாலும் கூட இவருக்கு என்னவோ சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு வரவில்லை.
அழகு பதுமையாக இருந்தும் பட வாய்ப்புகள் வரவில்லையே என்று ஏங்கி கொண்டிருந்த இவர் தன்னுடைய பெயரை மிர்னா என்று மாற்றிக்கொண்டார். இவருடைய உண்மையான பெயர் சயனா சந்தோஷ் என்பதாகும்.
அதன் பிறகு ஆதிரா சந்தோஷ் என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு அதிதி மேனன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது மிர்ணா மேனன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பிறந்தது முதல் தற்போது வரை நான்கு பெயர்களை கொண்டிருக்கிறார் நடிகை மிர்ணா. தமிழில் புர்கா என்ற திரைப்படத்தில் நஜ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் மருமகளாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது பெர்த் மார்க் என்றதமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஒரு பக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இணைய பக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது நீச்சல் உடைக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் டைகர் முத்துவேல் பாண்டியனின் மருமகளா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.