டிக்டாக், Youtube உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ்.இவர் சில திரைப்படங்களிலும் தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்களின் அபிமான நடிகையாக இருக்கிறார் நடிகை கேப்ரில்லா. இவருடைய நடிப்பு திறமைக்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அயிரா திரைப்படத்தின் இளம் வயது நயன்தாராவாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய உடல் ஆரோக்கியம் குறித்து சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
அவர் பேசியதாவது சினிமாவில் சீரியலில் பிஸியாக நான் நடித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய உடலை நான் கவனித்துக் கொள்ளவில்லை.
எந்நேரமும் வேலை வேலை என்று இருந்ததால் என்னுடைய உடலை கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
இதனால் தான் என்னுடைய உடல் எடை கூடிவிட்டது. ஆனால், தற்பொழுது என்னுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்.
தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறேன். தினமும் நான் அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
மேலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சத்துமாவு கஞ்சி குடிக்கிறேன். இதன் மூலம் என்னுடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
எந்த வேலையாக இருந்தாலும் சரி எவ்வளவு வேலை பளு இருந்தாலும் சரி நம்முடைய உடல் தான் நமக்கு முக்கியம். நம்முடைய உடல் இல்லை என்றால் நாம் இல்லை. எனவே உடலை பாதுகாப்பதிலும் உடல் நலனை பேணுவதிலும் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பதிவு செய்திருக்கிறார் நடிகை கேப்ரில்லா.