நாடு முழுதும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறதோ..? இல்லையோ..? இணைய பக்கங்களில் நடிகைகளும் நடிகர்களும் ஜரூராக கொண்டாடி வருகின்றனர்.
கேரளா ஸ்டைல் புடவையை கட்டிக்கொண்டு நடிகைகள் பலரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷின் கேரளா ஸ்டைல் புடவை கட்டிக்கொண்டு அழகு ராணியாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷா இது..? நிஜமாவா நம்பவே முடியலையே..? என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக கூடுதல் அழகுடன் காட்சியளிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். பெண்கள் புடவை கட்டினாலே அழகுதான். அதில் கீர்த்தி சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா..?? என்று லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.
சந்தன நிற புடவையில் சந்தன சிலையாக ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்.