இப்படி இருந்தால் படவாய்ப்புக்காக அத பகிர்ந்திருப்பேன்..! – சீரியல் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்..!

0
249

பிரபல சீரியல் நடிகை நட்சத்திர பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்களிடம் நீங்கள் சிக்கி இருக்கிறீர்களா..? என்ற கேள்விக்கு வெளிப்படையான பதில் கொடுத்து இருக்கிறார்.அதில் தன்னுடைய அனுபவபூர்வமான பதிலை கொடுத்திருக்கிறார் நக்‌ஷத்ரா நாகேஷ் என்று தான் கூற வேண்டும்.

சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்.சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக அழைக்கும் நபர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை நட்சத்திரா பட வாய்ப்புக்காக உங்களை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்களா..? என்றால், ஆம் அழைத்திருக்கிறார்கள்.

ஆடிஷன் நடக்கிறது பாண்டிச்சேரியில் இரண்டு நாள் தங்கி இருந்து ஆடிஷன் நடத்த வேண்டும் என்றெல்லாம் கூப்பிடுவார்கள்.

ஒரு மெகா சீரியல் நடிப்பதற்கு இரண்டு நாள் அதுவும் தங்கியிருந்து எல்லாம் ஆடிஷன் என்பது நடக்கவே நடக்காத ஒரு விஷயம். ஆனால் இவர்கள் எதற்காக இப்படி கேட்கிறார்கள் என புரிந்து கொண்டேன்.

ஒருவேளை நான் நடித்தால் தான் என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் நான் இருந்திருந்தால். ஒருவேளை பட வாப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருப்பேன் என அந்த நேரத்தில் யோசித்துள்ளேன்.

ஆனால் எனக்கு அப்படியான சூழ்நிலை இல்லை. நான் மட்டும் என் வீட்டில் சம்பாதிக்க கூடிய ஆள் இல்லை வீட்டில் இன்னும் சிலர் சம்பாதிக்கிறார்கள். நான் நடித்து அதன் மூலம் வரக்கூடிய சம்பளத்தில் தான் என் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை எங்கள் வீட்டில் இல்லை.

ஆனால் நாம் வேலைக்கு சென்றால்தான் பணம் கிடைக்கும். அதன் மூலம் தான் நம்முடைய வீட்டின் பசி தீரும் என்ற நிலையில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் கடன் பிரச்சினைகள் இருப்பார்கள். அப்படி இருக்கக்கூடிய நடிகைகள் கண்டிப்பாக இப்படியான விஷயங்களை சமரசம் செய்து கொண்டு செல்வார்கள்.

இப்படியான ஆட்களிடம் இருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பது தான் உண்மை. ஆனால் எனக்கு எந்த ஒரு பொருளாதார பிரச்சினையும் கிடையாது என்பதால் இந்த விஷயங்களை எளிமையாக நான் கடந்து வந்து விட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்.