50 வயசில் மறுமணம், தாம்பத்யம் கூட ஓ.கே தான்.. ஆனால், இது..? – நடிகை சுகன்யா ஒப்பன் டாக்..!

0
405

பிரபல நடிகை சுகன்யா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் பல இளசுகளின் கனவுக்கன்னியாக பறந்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

1980களில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சரத்குமார் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமணம் ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. கணவரின் துன்புறுத்தல் காரணமாக அவரை விவாகரத்து செய்தார் நடிகை சுகன்யா.

இவருடைய விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை நடுவே நடைபெற்றது. ஒருவழியாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ”கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது.

சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்தே கிடைத்தது

மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வரவில்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன்.

ஒருவேளை நான் 50 வயசுக்கு பிறகு திருமணம் ஓகே.. தாம்பத்தியம் கூட ஓகே.. ஆனால்,.. எனக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா..? அல்லது ஆயா என்று அழைக்குமா..? என்று குழப்பமாக இருக்கிறது. இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயமாக பார்கிறேன். என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.

வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை இருக்க   வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் தற்போதைக்கு சொல்லமுடியாது.

என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ..? அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்று கூறியுள்ளார்.