பட வாய்ப்பு தருவதாக கூறி முதலில் நடிகையில் தாயை வேட்டையாடியது மட்டுமில்லாமல் பிறகு அவரது மகளையும் வேட்டையாடிய பிரபல இயக்குனரை கைது செய்துள்ளது காவல் துறை.
இதில், நடிகைக்கு 18 வயது கூட ஆகவில்லை என்பது தான் கூத்து. இதனால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர். கேரளா-வை சேர்ந்த இயக்குனர் ஜாசன் அலி என்பவர் இளம் நடிகை ஒருவருக்கு பட வாய்ப்பு தருவதாகவும், ஆடிஷனில் கலந்து கொள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வரும் படியும் கேட்டுள்ளார்.
ஏற்கனவே பைனரி என்ற படத்தை இயக்கியவர் என்பதால் நடிகை தன்னுடைய தாயுடன் ஆடிஷனுக்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் நடிகையின் தாயாரை பார்த்த அவர் தனி அறை எடுத்து அவரை வேட்டையாடியுள்ளார்.
அதன் பிறகு சில மாதங்கள் கழித்து, அந்த நடிகைக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும், கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தன்னுடைய ஆசையை தீர்த்து கொண்டிருக்கிறார். மேலும், அந்த நடிகையிடம் அவரது தாய் குறித்து மோசமான முறையில் வர்ணித்து பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் இப்படி செய்ததை தன்னுடைய தாயிடம் கூறி அழுதுள்ளார் நடிகை. இதனால் கடுப்பான நடிகையின் தாய் ஜாசிக் அலி மீது புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார் அந்த நடிகையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாசிக் அலி வாய்ப்பு தருவதாக அந்த பெண்ணின் தாயாரை வேட்டையாடியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் கொடுத்த புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று பின்னர் வெளியே வந்துள்ளார். அம்மாவை தொடர்ந்து மகளிடமும் நைசாக பேசி… தனியாக அழைத்து ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட ஜாசிக் அலி தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.