பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை சந்தியா ஜகார்லமுடி. குறிப்பாக வம்சம் சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே உருவானது.நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. பூமிகா என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சந்திரலேகா உள்ளிட்ட பல்வேறு செய்திகளை நடித்திருக்கும். இவர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி தெரு நாய்களை பாதுகாக்கும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.காயம் அடைந்த பிராணிகள், நாய்கள் உள்ளிட்டவற்றை காப்பாற்றி அவற்றுக்கு முறையான சிகிச்சை கொடுத்து அவற்றை காப்பாற்றி வருகிறார்.
சமீபத்தில், youtube சேனல் ஒன்றில் பேசிய இவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசி இருக்கிறார்.கடந்த 2006 ஆம் ஆண்டு சீரியல் ஒன்றின் அறிமுக பாடலை கும்பகோணத்தில் உள்ள கோயிலில் படமாக்கியபோது நடந்த சம்பவத்தை பற்றி பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது கோயில் யானையுடன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த யானை திடீரென என்னை தாக்கி விட்டது. அந்த யானை மீது இதுவரை எனக்கு எந்த கோபமும் கிடையாது.
ஆனால், அந்த யானை தாக்கியதால் என்னுடைய உடம்பில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்றும் அகற்றும் சூழல் உருவாகியது. யானை என்னை தாக்கியதும் நான் மயக்கம் அடைந்து விட்டேன்.
அதிலிருந்து நான் உயிர் பிழைப்பதே மிகப்பெரிய விஷயம் என்ற நிலை இருந்தது. அந்த யானை என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது. ஆனால் அது என் மீது கால் வைத்து மிதித்தது போல உணர்ந்தேன் என பேசியிருந்தார்.
அதனை அடுத்து அந்த யானையிடம் மீட்டு அங்கிருந்து சிலர் படக்குழுவினர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவருமே என்னுடைய படப்பிடிப்பில் பங்கேற்ற நடன கலைஞர்கள் தான்.
உயிர் போகும் அளவில் நான் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது என்னை தூக்கிச் சென்ற டான்ஸர்களில் ஒருவர் என்னுடைய மார்பகத்தை பிசைந்து சுகம் கண்டு கொண்டிருந்தார்.
என் வாழ்க்கையில் நடந்த மிக கசப்பான சம்பவம் என்றால் இதுதான் என்று நான் சொல்வேன்.
அந்த நேரத்தில் கிட்டத்தட்ட பிணம் போல நான் கிடந்தேன். அப்போது கூட என்னுடைய மார்பை கசக்கி சுகம் கண்டு கொண்டிருந்தார் அந்த டான்ஸர்.
நான் மயக்க நிலையில் இருந்ததால் அந்த டான்சர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் மார்பில் கை வைத்து தவறாக நடந்து கொண்டதை மட்டும் என்னால் நன்றாக உணர முடிந்தது.
என் அம்மாவிடம் கூட இந்த விஷயத்தை நான் இதுவரை கூறியது கிடையாது. இந்த விஷயத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் எனக்கு ஆனது என கண்கலங்கி பேசியிருக்கிறார் சந்தியா ஜகர்லமுடி.