தி கேரளா ஸ்டோரி படத்தின் ஒரு வார வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா மிரண்ட பாக்ஸ் ஆபிஸ்

0
90

இந்திய அளவில் பெரும் எதிர்ப்புகளை மீறி கடந்த மே 5ம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அளவுக்கு ஒரே வாரத்தில் வசூலை வாரி குவித்து இருக்கிறது.

ஹிந்தி இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் பாலிவுட்டில் தயாரான படமான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியதால், இந்த படத்திற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதில் கேரளாவில் இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரமான செயல்பாட்டுக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதிலும் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து பெண்கள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைத்து தீவிரவாத செயல்பாடுகளுக்கு கட்டாயப்படுத்தி உள்ளதாக படத்தில் காட்டி உள்ளனர்.

அது மட்டுமல்ல மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் என்னதான் தீவிரவாதிரத்திற்கு எதிரான படம் என்றாலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் குவிகிறது. அதேபோல் மதநல்லிணக்கத்திற்கு எதிராகவும் இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்கின்றனர்.

இப்படி நாடு முழுவதும் ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முதல் நாளில் 8 கோடி வசூலித்து பலரது வாயையும் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் 13 கோடியும், மூன்றாவது நாளில் 17 கோடியையும் குவித்தது.

ஆக மொத்தம் ஒரே வாரத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒட்டு மொத்தமாக 37 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி உள்ளது. இந்தப் படத்திற்கு எழுந்த உலகளாவிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் இத்தனை கோடியை குவித்திருப்பது இந்திய திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.