இந்தியா சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக லாபத்தையும் அள்ளிக் கொடுக்கும்.இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து ,பல வருடங்களாக சினிமா வாய்ப்பை தேடி கஷ்டப்பட்டு முன்னணி நடிகராக வந்தவர் .இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன போதிலிருந்து ஒரு எளிய நடிகராகவே வெளிப்படுத்திவருகிறார் .
இவர் சினிமாக்கு வந்த நாள் முதல் இன்று சூப்பர் ஸ்டார் ஆனவரே ஆடை போன்ற விஷயத்தில் மிகவும் எளிமையான மனிதராகத்தான் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் .அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாலும் மேக்கப் போட்டு வரமாட்டார்.திரைப்படங்களில் மட்டுமே அதிகம் மேக்கப் உடன் தோன்றுவதை நம்மால் பார்க்க முடியும்.
நடிகர் அஜித் மிகவும் எளிமையான மனிதன் ,இவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் .இவர் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்துள்ளார் .அவர் நிஜா வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அப்படியே திரையிலும் தன்னை வெளிப்படுத்துவர். நடிகர் அஜித் தனக்கு நரைக்க அரபித்த பிறகு திரைப்படங்களிலும் நரைமுடியுடன் நடிக்க துவக்கினார் , அதையும் ஒரு ஸ்டைலாக மாற்றி விட்டார் .தமிழ் சினிமாக்களில் தங்கள் நிஜா முகத்தை எந்த ஒரு மேக்கப் இல்லாமல் வெளிப்படுத்தக்கூடிய நபர்களாக அஜித்தும், ரஜினிகாந்தும் திகழ்ந்து வருகின்றனர் .
மேலும் கமலஹாசன், விஜய் ,விக்ரம் போன்ற நடிகர்கள் அனைவரும் மேக்கப் ,டை போன்றவற்றை பயன்படுத்தி தங்களை அழகாக திரையில் வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சீதா இதை பற்றி கூறியிருந்தார் . தமிழ் சினிமாவில் அஜித்துக்கும் , ரஜினிக்கும் இருக்கும் தைரியம் சினிமாவில் உள்ள எந்த நடிகைகளுக்கும் இல்லை,மேக்கப் போடாமல் எந்த ஒரு பேட்டியிலும் அவர்கள் பங்கேற்க முடியாது. அதற்கு எந்த நடிகைக்கும் தைரியம் கிடையாது .அந்த வகையில் ரஜினியும் ,அஜித்தும் பாராட்டுக்குரியவர் என்று குறிப்பிட்டு இருந்தார்