அஜித் மனைவி ஷாலினியின் சிறு வயது ஸ்பெஷல்….. அரிய புகைப்பட தொகுப்பு…. உங்களுக்காக இதோ…!!!

0
171

பிரபல நடிகையும், நடிகர் அஜித் அவர்களின் மனைவியுமான ஷாலினி அவர்களின் சிறுவயது அரிய புகைப்படங்களை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

ஷாலினி 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தவர். 1983 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள மொழி திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார் .

தமிழில் அதே ஆண்டில் வெளியான ஆனந்த கும்மி என்ற திரைப்படத்தில் இவருடைய மழலை நடிப்பு அறிமுகமானது.

இடைத்தொடர்ந்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் பந்தம், பிள்ளை நிலா போன்ற தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் .சிறுவயதிலேயே பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல், கியூட் ஸ்மைல் என ரசிகர்களை கவர்ந்தவர்.

பின்னர் வளர்ந்து தமிழில் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலமாக விஜய்க்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பிறகு வெற்றி படநாயகியாக வலம் வந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். துளியும் ஆபாசம் இல்லாமல் பார்ப்பதற்கு அப்படியே பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கும் இவரின் நடிப்பு பெரும் அளவு ரசிகர்களை உருவாக்கியது.

சிவாஜி, ரஜினி போன்ற பல லட்சத்துடன் ஷாலினி நடித்துள்ளார். ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கிய போது அம்மாவுடன் மட்டுமே பட விழாக்களில் கலந்து கொண்டார்.

அமர்க்களம் திரைப்படத்தின் மூலமாக இவர்களின் காதல் துளிர்விட்டது. ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் பின்னர் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.

இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆனந்தமாக இருந்து வந்தார்கள். திருமணத்திற்கு பின் ஷாலினியின் ஆசைகளை நிறைவேற்றும் சிறந்த கணவராக இருந்தார் அஜித்.

இவரது தங்கை ஷாமிலியும் சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் பெரிதளவில் இல்லாததால் நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாத ஷாலினி இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு அஜித்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இவரின் சிறு வயது புகைப்படங்கள் உங்களுக்காக இதோ…