ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடிப்பாரா.?… கேட்கவே ஆச்சரியமா இருக்கே…! அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர் …!!!

0
112

கல்லீரல் பிரச்சனையால் தவித்து வந்த நடிகர் மனோபாலா கடந்த 3ஆம் தேதி அன்று  இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இவரின் மறைவு சினிமா பட்டாளத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு அனைத்து நடிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். அனைவரும் இவரை ஒரு காமெடி நடிகராக மட்டும் தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவர் தமிழ் சினிமாவில்  மிகப்பெரிய இயக்குனர் என்று யாருக்கும் தெரியாது.

ஆரம்ப காலகட்டத்தில் பாரதி ராஜாவிற்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக் போன்ற படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆகாய கங்கை என்ற  திரைப்படத்தை இயக்கினார் .ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்து போனார் மனோபாலா.

அதன் பிறகு நடிகர் மைக் மோகன் என்பவர் மனோபாலாவிற்கு உதவி செய்ய முன் வந்தார். அவர் கொடுத்த கால் ஷீட்  நாட்களில் மைக்கேல் மோகனை  வைத்து மனோபாலா பிள்ளை நிலா என்ற திரைப்படத்தை உருவாக்கினார். பிள்ளை நிலா திரைப்படம்  மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அத்திரைப்படத்தை தொடர்ந்து என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், ஊர் காவலன் ,மற்றும் மல்லுவேட்டி மைனர் போன்ற பல படங்களை இயக்கி வெற்றியை  சந்தித்தார்.

இவர் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் . மனோ  பாலாவிற்கு அதிக புகைப்பழக்கம் இருந்திருக்கிறது. இவரே ஒரு பேட்டியில் எனக்கு சிகரெட் பிடிக்கலைன்னா கை கால் எல்லாம் நடுங்கி போய்விடும் என்று கூறினார் .அவர் இயக்குனராக அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 சிகரெட் களுக்கு மேல் அடிப்பாராம் . அதன் பிறகு இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால்.

  இவரை சோதித்துப் பார்த்த மருத்துவர் இனி ஒரு சிகரெட் பிடித்தாலும் உயிருக்கு ஆபத்து என்று கூறினார்கள் .  அதன் பிறகு தான் மனோபாலா புகைப்பழக்கத்தை கைவிட்டார். இவருடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கும் சிகரெட் பிடிக்காதீங்க என்ற அட்வைஸை கொடுத்துள்ளார் .ஒரு காலகட்டத்தில் புகைப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான மனோபாலா அதன்பிறகு அதிலிருந்து மீண்டு  வந்தார்.